பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


21. நோய்க் கிடங் கொடேல்!

அழகுற அடுக்கிய கற்களே கவினுறு
மாளிகை யாகி நலமுற வாழ
உதவு கின்றன! உண்மைஇஃ தறிவீர்!
காயும் வெயிலும் கடுங்குளி ரதுவும்
பீழை தருகொசு முதலிய உயிர்களும்
வருத்தா வண்ணம் பாது காப்பது
அமைவுற அமைந்த வீடே யாகும்!
அயர்வினை நீக்கி அமைதி தந்திடும்
உறக்கமும் வீட்டினில் தான்.உறும் அறிவோம்!
பயிலறி வாலே வரும்பழக் கங்களும்
வாழும் வாழ்க்கையில் வடிவம் கொண்ட
வழக்கங் களும்தான் வாழ்வாய் அமையும்
சுடாமண் கல்லால் ஆய வீடு
அடைமழைக் குறுதி யாகநிற் காது!
வடிகால் இல்லா வீடு நோயினை
வாவென் றழைக்கும்! வளிபுகுந் துலவா
வீடு வாழ்வுக்குச் சுகமளிக் காது!
பயில்தொறும் பயில்தொறும் வாழ்வினை வளர்க்கும்
பழக்கங் களைக்கைக் கொள்ளுதல், நல்ல
வாழ்வுக் குத்துணை யாக அமைந்திடும்
வழக்கங் களையே வழக்க மாக்குதல்
இன்புறு நலன்கள் யாவும் பொருந்திய
நல்வாழ் வுக்கு நனிமிகத் தேவை!
பணிஎன் பதூஉம் முயற்சிஎன் பதுரஉம்
எண்ணிலா இடரையும் துயரையும் தாங்கிச்
செய்வதே யாகும்! இத்தகு வழக்கம்
வாழ்வினைத் தாங்கும் வைரத் துரணாம்!
நாள்தொறும் பொருந்தாப் பழக்கம் தவிர்த்தலும்