பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


22. இனியன தேர்க!

விரிகடல் சூழ்ந்த பெருஞா லத்தில்
வென்று வாழ்ந்த வித்தகர் வாக்கும்
வாழ்வும் புகட்டுவ தியாதெனின் உடல்நோய்க்
குரிய மருந்துப் பொருள்ஒன் றாயினும்
அந்த மருந்தொடு கூட்டும் அனுபானப்
பொருள்வழி மருந்துப் பொருட்பயன் மாறும்.
அதுபோல்,
உரையின் பயன்உரை யளவின தன்(று)அவ்
வுரையினை எடுத்துக் கொள்வோர் உள்ளப்
பாங்கினைப் பொருத்துப் பொருள்மா றுபடும்.
அவ்வழி பயனும் மாறு பட்டிடும்!
என்றிந் நாள்நாம் உண்மை தெளிந்தனம்.
நனிசுவை யுடையது; நன்னலம் தருவது
மலர்த்தேன் ஆயினும் அனுபா னத்தால் அ
ந்தத் தேனும் நஞ்சாவ துண்டு!
அதுபோல்,
நன்றெனத் தெளிந்து நவிலும்நல் லுரையை
நஞ்செனக் கொண்டு சினம்கொள் வோரையும்
கண்டனம்! யாமறிந்து ஒன்றேனும் தீய
பொருள்படப் புகன்றதும் இல்லை தீச்சொல்
எடுத்து மொழிதற் கெண்ணியதும் இல்லை!
எனினும் யாம்மொழிந் திட்ட சொற்களில்
யாதே னும்மனம் நின்று உறுத்துமேல்
சொலும்திறன் நமக்கிலை என்பதே உண்மை!
நெஞ்சிற் களங்கம் கொஞ்சமும் இல்லை
இதுமுக் காலும் உண்மை;-தேறுக!
இனியன தேர்ந்து எடுத்துச் சொலும்திறன்