பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


25. ஒரே ஒரு கேள்வி!

நீ, புகழ் பெற்ற மூதாதையர் அல்ல!
நீ, பிறவியில் வெற்றி பெற்றவனும் அல்ல!
நீ, பிறவியிலேயே எதையும் இழந்தவனும் அல்ல!
உன் வெற்றியையும் தோல்வியையும்
உனது விளையாட்டே முடிவு செய்கிறது!
உனது வாழ்க்கையின் போக்கு
உன்னுடைய பழகும் பாங்கில் இருக்கிறது!
உன்னுடைய தலைமுறைகளில் அல்ல!
ஒரு தலைமுறைகள் நிறத்தின் புள்ளிகளைக் கூட்டினால்
உனது பெற்றோர் உனக்குரிய இரத்தத்தைத் தரவில்லை!
உனது ஒட்டமே புள்ளிகளைக் கூட்டுகிறது!
உன்முன்னோர் எங்கிருந்தார்கள் என்பதல்ல கேள்வி!
நீ எப்படி இருக்கிறாய் என்பதே கேள்வி!
உன் மூதாதையர் வாழ்நிலைக்கும்
உன்வாழ்நிலைக்கும் உள்ள இடைவெளியே
காலம் தந்த பரிசு வரலாற்றுக்கு ஆக்கம்!
இந்தத் தலைமுறை
உன் மூதாதையின் உடுப்பை உடுத்து
உலாவரும்படி உன்னைக் கட்டுப்படுத்தாது!
உனக்கு ஒர் உடுப்பை உன்மூதாதையர்
விருப்புடன் தாரார் இல்லவும் இல்லை!
உனது உடுப்பை நீ சம்பாதித்துக் கொள்!
உன்முன் உள்ள ஒரே ஒரு கேள்வி
"நீ என்ன செய்தாய்?" என்பதேயாம்!
அஃதன்றி
உன் பாட்டன் யார்? என்று கேட்க மாட்டார்கள்!