பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


27. சோலைகள்!

பாரினைத் தழுவிப் பாதுகாக்கும் சோலைகளே!
மண்ணும் மண்ணில் வாழும் மானுடமும்
வாழ வகைசெயும் சோலைகளே வாழ்க!
எங்கும் பசுமையைக் காட்டி வாழ்க!
கண்களுக்குக் குளிர்ச்சியைத் தந்துமகிழ் விக்கிறாய்
சிந்தைக் கினிய செவியிற் கினிய
குயிலிசை கேட்க வைத்துமகிழ் வூட்டும்
சோலையே வாழ்க!
உயிர்ப்புக் குரிய உயரிய ஆக்சிஜனை
அள்ளித் தரும் சோலையே வாழ்க!
தின்னக் காய்களும் கணிக ளும்தரும்
பழமரச் சோலைகளே! வாழ்க! வாழ்க!
அசுத்தக் காற்றினைக் குடித்துப்பூ மண்டலத்தைத்
துரய்மை யாக்கிக் காக்கும்சோ லைகளே!
ஒ! ஒ! பசிய சோலைகளே!
உங்க ளுக்கொரு வேண்டுகோள்!
இப்புவி காக்கும் ஒசானில்
ஓட்டை விழுந்துள திந்த ஒட்டையை
அடைக்கும் ஆற்றல் நீங்கள் நிகழ்த்திடும்
விந்தை மிகுந்த ஒளிச்சேர்க் கைக்கே
உண்டு! ஒ! ஒ! உயர்சோ லைகளே!
ஒளிச்சேர்க் கையை விரைந்து செய்க!
பன்முறை செய்க! பார்காத் திடுகவே!