பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

203




38. நேர்வழி

சாலையில் செல்ல வேண்டிய பேருந்து தடம் மாறுகிறது
சாலையில் விருப்பம்போல் நடைபோடுபவன் மீது
பேருந்து மோதல்! சாவு!
ஏன்? தலைவிதியா? இல்லை! இல்லை!
சாலை விதி தப்பிடின் சாவேதான் வரும்!
அதுபோல,
வாழ் வெனும் பயணம் நேரிய நல்வழியில் நடந்தால்
வளம் உண்டு; புகழ் உண்டு; அழிவே இல்லை!
வரலாறு சோதித்து உயர்த்திக் காட்டிய மாந்தர்
நீதியொடு பொருந்திய நேர்வழியில் வாழ்ந்தோரே யாவர்
சரியான வழியிருக்க சாமர்த்திய வழி ஏன்?
தவறே செய்யினும் பிறருக்குக் கேடு செய்யும்
பழிபடு செயல் செய்யற்க!
கடவுளிடம் முறையிட்டதற்கெல்லாம் விடை கிடைக்குமா?
விடை கிடைக்கும்!
எப்போது?
நல்லதுக்கு வாழ்வு கிடைத்தால் விடை கிடைக்கும்!
நன்மையே கடவுள் - சொர்க்கம்!
நன்னெறியதனில் செல்க! சேமமுற வாழ்க!