பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

208

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


42. மனிதனின் விலை!

"ஒ. மனிதனே!
எல்லாம் உடையவனாகப் பறை சாற்றும் மனிதனே!
எங்கே, சொல்! இன்று உனக்கென்ன விலை!
இன்று உனக்கேது விலை? விலையை நீ கொணரவும்
இல்லை
விலையைப் பெறும் முயற்சி செய்யாது
வாழ்நாளை நடிப்பில் நாளும் கழித்து வருகிறாய்!
ஏ... மனிதனே!
உடன் விலையைப் பெறு! வேலைக்காரனாகப் பெறும்
விலையல்ல!
தோழனாக இருப்பதற்குரிய விலையுமல்ல.
நம்பிக்கைக்குரியவனாக விளங்குதலுக்குரிய விலையும்
அல்ல.
இவையெல்லாம் வாழ்க்கையின் தேவை.
விலையே இல்லையாயினும் சிலர் அறிந்தும் அறியாமலும்
விலை தந்து விடுவர்.
இந்த விலை நிலையானதல்ல.
உனக்கென உரிமை பூண்டதொரு விலை தேவை...
உடன் அந்த விலையை அடைக.
மனித உறவுகளில் வீழ்ச்சிகளை அனுமதிக்காதே!
வீழ்ச்சி தரும் உறவின் தொடக்க நிலை - தெரியுமா
உனக்கு?
சடச்சடவென, பலநாள் பழகிய உறவும் வீழும்
நன்றி சொல்லலும் உயரிய அன்பில் உறுதியின்மையுமே
மனித உறவு நிலைகளின் வீழ்ச்சிக்கு வித்து!
நம்பிக்கைச் சிதறல்களிலேயே செகம் சிதறுகிறது.
விண்ணிலும் மண்ணிலும் பயனும் புகழும் பெறவேண்டுமா?
காட்டிக் கொடுக்காதே!
உண்மையாக இரு! பழகுநருக்கு உண்மையாக இரு!
உனக்குத் தேவையான ஒருவருக்கு நம்பிக்கையைத் தருக:
அதுவே, உன் விலை!