பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

209




43. அனுபவ முத்திரை!

"காலந்தோறும் வயது வளர்கிறது.
வயது வளரும் சதுரப்பாட்டில்
சந்தர்ப்பங்கள் வந்தமைகின்றன.
சந்தர்ப்பங்கள் அனுபவங்களின் வாயில்கள்
சொந்த அனுபவமின்றி இளமை எதையும் ஏற்காது.
அனுபவங்கள் காலத்தொடு பட்டவை!
நாம் இளையோருக்குப் புத்திசாலித் தனத்தை விற்று
மூடி முத்திரை வைத்தல் இயலாது.
அல்லது நாமேதான் அனுபவத்தின் பயனைக்
குறைத்து மதிப்பிட முடியுமா?
அனுபவங்கள்தானே தத்துவங்களின் சோதனைகள்!
கொள்கைக் குன்றில் ஏறியபடிகள்!
மூத்தோரின் அனுபவங்களில் பல,
இளையோருக்கு,
நகைப்பிற்குரிய கூத்தாகப் புலப்படும்!
அனுபவத்தின் பழுத்த மனத்துச் செய்திகளுக்கு ஈடு
எதுவுமில்லை:
பழுத்த அனுபவக் களமாகக்
கடந்த வயதின் முதிர்ச்சியைக் காட்டு நரைக்கும் மாற்று
இல்லை!
முதிர்ந்த இந்த மூதறிவும் நரையும் கூடிடின்
இரட்டை ஆற்றல் கிடைக்கும்:
இவற்றுடன் ஆர்வமும் பொங்கி எழுந்தால்
காலம் செய்யாதது எது?