பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

212

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


46. உலகத்து இயற்கை!

மாந்தன் மன்பதை உலகை மதிப்பிடுகிறான்
அவன்தன் மதிப்பீட்டுக்கு அடிப்படை அவன் மனமே!
ஊரவர் பேசுவது அவரவர் மனத்துள செய்திகளே!
அண்டை வீட்டார் பயங்கரமானவர்கள் என்று
இயம்புநர் ஒருபுறம்!
ஐயோ, பாவம்! அண்டை வீட்டார்
அனுதாபப்படத் தக்கவர் என்பர் சிலர்!
அடுத்த வீட்டிலா? அதை ஏன் கேட்கிறீர்கள்?
சுயநலப் பிண்டங்கள் என்று கூறிப் பிதற்றுவர் சிலர்.
நல்லவர் ஒருவரை அணுகினால்
எங்கும் நல்லவரே வாழ்கின்றனர், எவரும் நல்லவரே
என்பார்.
உலகம் நந்தம் உணர்வின் பிரதிபலிப்பே!
எங்கும் நல்லவர் இல்லை என்றான் துரியோதனன்!
எல்லாரும் நல்லவரே என்றான் தருமபுத்திரன்!
இதுவே, உலகத்து இயற்கை!