பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

221


55. சிரிப்பே மருந்து

"சிரித்து மகிழ்தலுக்குரிய வாய்ப்பு வந்துழி
இழத்தல் ஆகாது.
சிரிப்பு, மனிதனை அறிமுகப்படுத்தும் சாதனம்!
சிரிப்பு, மனித உலக நோய்களின் மீது
கொள்ளும் வெற்றியாகும்.
உனக்கு நீயே சிரித்துக் கொள்ள முடிந்தால்
அது உன் இயலாமையை வெற்றி கொள்ளும்
சிரிப்பாகும்!
சிரிப்பு, ஒரு நல்ல மருந்து!
வாழ்க்கையின் களைப்பு நீக்கும் மருந்து
சிரிப்பேயாகும்!
சிரிப்பு, முறுக்கேறிய நரம்புகளைத் தளர்த்திவிட்டு
வலிமையைத் தந்து கடமைகளைச் செய்ய
உறுதுணையாய் அமைவது ஒப்பற்ற சிரிப்பேயாம்!
மருந்துகள் பலவற்றிலும் சிறந்த மருந்து
சிரித்து மகிழ்தலேயாம்!
மருந்து நோய் நீக்கும்!
சிரிப்போ இதயத்தின் நோய் நீக்கும் மருந்து!
மகிழ்ச்சியும் கூட!
அலுப்புக்களிலிருந்து காப்பதும்
சிந்தைக்கு இதமளிக்கும் சிரிப்பே!