பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

224

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


58. அழியா மானுடம்!

"மானுடம் அழியாது! அழியாது!"
மானுடம் அழியாதென்னும் உணர்வே!
அடுத்துவரும் வாழ்க்கைக்குரிய நம்பிக்கைக்குச்
சுவையூட்டுகிறது!
இன்று, வீழ்நாள் படாமை நன்றாற்றி
வாழ்தல் வேண்டும் என்று விரும்பு!
நாளை வரும் வாழ்நாளில் நல்லவண்ணம் வாழ்ந்திடலாம்!
மீண்டும் ஒருவாழ்வு இல்லையெனில்
இந்த வாழ்வு எதற்காக?
காய் கனிகளும் கால் நடைகளும்
மானுடத்திற்குப் பயன்படும் நிலையோடு வாழ்ந்து
                                                முடிகின்றன.
எல்லா இயற்கையும் மறைகின்றன.
கால்நடைகள் பிறக்கின்றன; சாகின்றன!
மானுடம் தோன்றி அழிவதா?
மானுடத்திற்கு அழிவற்ற நிலை இல்லையேல்
இயற்கையின் கடின உழைப்பிற்கு
எல்லையற்ற பயன் கிடைக்காது!
உலகத் திட்டம் நம்பிக்கையை இழந்து
மாபெரும் தோல்வியாகி விடும்.
ஆதலால், மானுடம் அழிவில்லாதது!
இன்று மட்டும் அல்ல என்றும் அழிவில்லாதது.
அழிவிலாத மானுடம் வாழ்க வென்று
கூறுவோம்!