பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

225




59. உணர்ச்சித் தூண்டல்!

மனிதர்கள் பலவீனங்களில் சமமானவர்களே!
மனிதர்களிடமெல்லாம் நீக்கமற இருப்பது பலவீனமே!
உணர்ச்சித் தூண்டல்களுக்கு இரையாகாத
இறையாண்மை உடையார் எவர்?
ஆயினும்
உணர்ச்சித் தூண்டுதல்களே
பலத்தையும் குணத்தையும் தருகின்றன!
உணர்ச்சித் தூண்டல்கள் இல்லையேல்
உலகேது? உலகத்தின் இயக்கமேது?
உணர்ச்சித் தூண்டுதல்களே மனிதனை
நற்குணங்கள் உடையவனாக்கிப் புடம் போடுகிறது!
தரத்தில் உயர்த்துகிறது.
உணர்ச்சித் தூண்டல்களை வெற்றி கொண்டு
விளங்குபவனே போராளி !
வெற்றி கொள் போராளி !
தன்னையே வெற்றி கொண்ட
தரணி புகழ் தகைமையாளன்!