பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

226

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


60. காலம்


காலம்தான் சிக்கல்களுக்குத்
திருத்தமான தீர்வுகள் காணும்!
இன்று தரும் தீர்வு மறுக்கப் படலாம்!
ஆனால், நாளை வேறுநிலை....
காலம் மாறுகிறது; காலண்டர்கள் மாறுகின்றன.
சந்தர்ப்ப சூழ்நிலைகளை மாற்றுகின்றன.
குருதி கொட்டும் புண்ணுக்குக் காலம் ஒருமருந்து!
காலமே, முறிந்து போன நட்புகளை இணைக்கும் தூதுவன்!
காலமே, நலம் சேர்க்கும் மருந்து!
காலமே, இழப்பை ஈட்டமாக்கும் சாதனம்!
காலம், கண்ணீரை வற்றச் செய்யும்!
காலம், நரம்பு மண்டலத்தை நிலைத்தன்மை
                                                 உடையதாக்கும்!
காலமே, தைரியத்தைப் புதுப்பிக்கும்!
கூர்ந்து கவனி!
குளிர்காலம் கடக்கிறது! வசந்தம் வருகிறது.
பருவகால மாற்றங்கள் வழி காலண்டர்கள் தரும்
படிப்பினையை ஒர்க!
காலம் உனக்கென வைத்திருக்கும் திருப்புமையம்
உன்னளவில் உண்டு - நீட்டிக்க!