பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

230

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


64. தனிமை வேண்டாம்!

தனிமை, வெறுமையானது!
தனிமை, துன்பமானது!
தனிமை, வாழ்தலுக்கு இசைந்த பொருத்தப்பாடு இல்லை!
நெறிமுறை உணர்த்தும் நிலையும் இல்லை!
எச்சூழ்நிலையிலும் தனிமையை அனுமதித்து
நாளை ஏமாற்றுதல் ஆகாது!
தனிமையைக் கடக்க வழி என்ன?
நீ, உன்னை நேசி!
தனிமையிலும் மகிழ்வாக இருப்பாய்!
உன் வாழ்க்கை வரைபடத்தை வரை!
அவ் வரை படத்தை உற்றுப்பார்!
நீ உன் வாழ்க்கை வரை படத்தை
உற்று நோக்கும் போது
நீ, செய்ய வேண்டுவன சில இருப்பதை அறிவாய்!
அறிந்ததைச் செய்!
நல்லபுத்தகங்களை நல்ல கூட்டாளிகளாகப் பெறுக!
நீயே, உன் சுயநலச் சுவர்களை
இடித்துத் தள்ளு!
எங்கெங்கு எப்போதெல்லாம்
உன் இருப்பு தேவையோ
அங்கெல்லாம் தவறாமல் இரு!
நட்பு சார்ந்த கூட்டமைவில்
இதயத்தை அன்பால் நிரப்பு!
தனிமை பறந்தே போகும்!