பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

237


71. வீடே அரண்மனை!

வீடு எது? சுவரும் கூரையும்
மட்டுந் தானா வீடு? இல்லை, இல்லை!
மனத்தின் கண் சொர்க்கத்தை ஆக்கல் வீடு!
பால்நினைந் தூட்டும் தாயின் உறவு உள்ளது விடு!
வாழ்க்கைப் போராட்டத்தின் களைப்பை நீக்கி
இதம் அளிப்பது வீடு!
அமைதி தழுவிய ஒய்வளிப்பது வீடு!
உலகத்தின் கதவைச் சாத்தி
இன்பக் கோட்டையாக விளங்குவது வீடு!
வீட்டில்தான் வலிமையற்றவர்களும்
உணர்வும் வலிமையும் பெற்று வாழ்கின்றனர்!
இந்தப் பரந்த உலகத்தில்
ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு
உளம் கனிந்த உறவினராகி
வாழும் இடம் எது? அது ஒரே ஒர் இடம்தான்!
அதுதான் வீடு!
சராசரி மனிதன் -
முடிசூடா மன்னனாய் விளங்குவதும் வீட்டில்தான்!
அவன் மனைவி இராணி
குழந்தைகள் சிற்றரசர்கள்!
எங்கே வீட்டில்தான்!
அதுதான் இன்ப வீடு!