பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

240

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


74. தாய்க்கும் உண்டோ ஒய்வு!

தாய் வேலை செய்கிறாள்! வேலை செய்கிறாள்!
தாய் தொடர்ந்து வேலை செய்கிறாள்!
வேலையா செய்கிறாள்!
இல்லை, இல்லை செய்வது வேலை!
ஆனால், விருப்பத்துடன் புனித வேள்வியெனச்
செய்கிறாள்!
ஆம்!
தாயின் இலட்சியம் இன்பக்களிப்பும்
அமைதியும் மகிழ்வும் நிறைந்த வீட்டைக் காண்பது!
வீட்டை மண்ணகத்தின் சொர்க்கமாக்குகிற வரை
வேலையினின்றும் நிற்கமாட்டாள்.
அது அவளின் நோன்பு!
பாடும் பறவை வானம்பாடி
காலையில் மெல்லப் பறக்கும்!
முன்னிரவு வரையில் திரிந்து வேலை செய்யும்!
ஏன்?
தனது குஞ்சுகளை ஊட்டி வளர்க்க
இருநூறுக்கு மேலான தடவைகளில்
குஞ்சுகளுக்கு உணவளித்துக் காக்கும்!
கருப்புக் காகம் பதினேழு மணிநேரம்
வேலை செய்து தன் குஞ்சுகளுக்கு
நூறுதரம் உணவளிக்கும்!
நமது வீட்டில் ஆற்றமிக்க தாய்
நாட்காலையில் எழுகிறாள்! இரவில் ஒய்வு எடுக்கிறாள்!
பறவைகளைப் போலப் பாடுபடுகிறாள்!
அவளுக்கு உயர்வான நோக்கம் இருக்கிறது!
கணவனுக்கும் குழந்தைகளுக்கும் உழைக்கிறாள்!
ஓயாது உழைக்கிறாள்;
கைம்மாறு கருதாத, இடையீடு இல்லாத, தியாகம் தழுவிய,
உழைப்பின் மறு பெயரே தாய்!
தாயின் வேலைக்கு முடிவே இல்லை!