பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

241


75. வித்தும் மரமும்!

முகம்பார்க்கும் கண்ணாடிக்குள் தெரியும்
உருவம் உன்னுடையதே!
ஆயினும் உன் உருவம், உணர்வுகளைத் தந்து
ஆளாக்கியது யார்?
நீயே வளர்ந்தாயா?
ஆம் எனில், நகைப்பே வருகிறது!
நானிலத்தில் விதையின்றி மரம் ஏது?
ஆலம் வித்து சிறிதே!
வித்தினின்றும் முளைத்து வளர்ந்த
மரமோ பெரிது!
அதுபோல
உன் தாய் போட்ட அடிப்படையே
வளர்ந்து, நீ ஆனாய்!
நீ உன் தாயைப் போல!
“தாயைப் போலப் பிள்ளை!
நூலைப் போலச் சேலை!”
என்ற பழமொழியை எண்ணுக!