பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

242

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


76. அந்த ஒரு பெயர்!...

இந்த வையகம் ஒரு சந்திப்பு!
உற்ற உறவில், ஊரவரில், உலகத்தில் என
எண்ணிப் பலரைச் சந்திக்கிறோம்!
ஆனால்,
நினைவில் நிற்கும் பெயர் ஒன்று
அந்த ஒரு பெயருக்கு ஈடான வேறொரு பெயர்
ஏது இந்த உலகில்?
அந்த ஒரு பெயருக்குரியார் யார்?
அவள்தான் தாய்! தாயின் பெயர்!
எண்ணும் பொழுதெல்லாம் இன்பம் ஊறும்!
ஆம்! தாய்தந்த பயிற்சிகள்
நினைவிற்குரிய வாழ்வியல் நெறிகள்!
வெற்றிப்படிகளைக் கடந்து ஏற
தாய்காட்டிய வழி உயர்ந்தது!
தாய் வழியையா காட்டினாள்! வாழ்க்கையையே
காட்டினாள்!
தாயின் இதயத்து அன்பில் கிடைத்த
ஆரா அரவணைப்பில் கிடைத்த பாதுகாப்பு
இனி எப்போது கிடைக்கும்?
வாழ்க்கைப் போராட்டத்தில்
தாயை நினைவு கூர்க!
அவள்தம் பிரார்த்தனை நினைவு கூர்க!
வளர்வாய்! வளர்வாய்!