பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

248

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


81. இடும்பைக்கு இரும்பை!

வாடிய முகம் ஏன்? நெஞ்சில் கவலை பெருக்கி நோவது
ஏன்?
நாளை வரும் துன்பம் கருதியா?
அதற்கு ஏன் இன்றே கவலை?
நாளை துன்பம் வரும்போது பார்த்துக் கொள்ளலாம்!
துன்பம் உனைவந்தடையாத நிலையில்
அதனை வரவேற்று இடும்பைப்படுவது ஏன்?
சிலபோது மனிதர்கள்
இடும்பைகளுக்கிடையே கிடந்து அல்லலுறலாம்!
ஆயினும், துன்புறுவது சில நாளே!
துன்பத்தின் முடிவில் இன்பம்!
எப்போது?
இடும்பையை நினைந்து கவலைப்படாது தமது கடமைகள்
மேல் சென்றால்
அவன் மெளனம் சாதித்தால் இடும்பை அவனை விலகிச்
செல்லும்!
இடும்பைகளை உருவாக்குகிறவன் இடும்பைக்குள்ளேயே
வாழ்கிறான்!
அது அவன் பழக்கம்!
இடும்பையை வரவேற்று அதற்குள் புகுவதில்
அவனுக்கு நிகர் அவனே!
அமைதியை உருவாக்குகிறவர்களுக்கு எப்போதும் அமைதி!
ஏன்? அவனுக்குத் தெரியும் எப்போது பிணக்கு வரும்
இடும்பைகள் வரக் கூடும் என்று!
அவன் காவல் நாய் போல உறங்குவான்
உள்ளே மீறி ஒன்றும் நிகழ்ந்து விடாது!
உன்னுடைய அமைதி இழப்பே இடும்பைகளைத் தரும்!
கவலற்க! கடமைகள் மேற் செய்க! -