பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

252

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


85. குணமும் குற்றமும்

இந்த உலகம் பெரியது! பெரியது!
எண்ணற்ற சிலைகள் நிற்கின்றன!
ஆனால்,
குற்றமே காணும் கனவானுக்குச் சிலை இல்லை!
கனவான்!
அவருடைய குறிக்கோள் என்ன?
கண்கள் இரண்டும் குற்றங்களையே காணும்!
உள்ளவாறல்ல!
குற்றத்தைப் பெருக்கியே காண்பர்!
குற்றத்தையே துரற்றும் சின்னப்புத்தியும் உண்டு;
விவரம் காண்பது, குற்றம் காண்பது
இவ்விரண்டும் வேறுபட்டவை!
விவரங்கள் காணும் மனமுடையவர்
குற்றமும் குணமும் காண்பர்!
மனிதன் குறைகள், உடையவனே!
ஆயினும்,
மாந்தர் பலரிடம் குற்றங்களைவிடக்
குணம் கூடுதலாகவே உண்டு!
எழுதும் வெள்ளைத்தாளில் ஒருபுள்ளி வை!
அட்டுக் கறுப்பு!
அக்கறுப்பைச் சுற்றி வெள்ளை நிறப்பரப்பு மிகுதி !
மனிதன், மனிதனைப்
பாரபட்சத்துடன் பார்க்கிறான்!
அன்புச் சகோதரனாகப் பார்ப்பதில்ல்ை!
அதனால், குற்றமே காண்கிறான்!
குற்றங்கள் காணற்க!
குற்றங்களை மறந்து விடு!
குணங்களையே காண்க! போற்றுக!