பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

257


89. விதிமுறை வாழ்வு!

வாழ்க்கைச் சக்கரம் சுழல்கிறது!
ஆம்!
நாம் அமர்ந்துள்ள வாழ்க்கைச் சக்கரம் சுற்றுகிறது!
நமது வாழ்க்கைச் சுற்றுக்கு நாமே பொறுப்பு!
மகிழ்வுந்து செலுத்தும்போது
ஒருகாலால் செலுத்துதற்குரியது ஆக்ஸ்லேட்டர்
மற்றொரு காலால் வேகத்தைத் தடைப்படுத்துதற்குரியது
பிரேக்!
அதுபோலவே வாழ்க்கையையும்
அமைத்து நடத்தத் துணிக!
நமக்குத் தேவை எழுச்சி; விழிப்பு!
எழுச்சியும் விழிப்புணர்வும் உந்து சக்திகள்
வாழ்க்கைப்பாதையில் கிடக்கும் கற்கள் எத்தனை!
எத்தனை!
நமது வாழ்க்கைப் பயணம் சந்திக்கும்
விபத்துக்களுக்கு நாமே பொறுப்பு!
வாழ்க்கையின் இலக்கில் தடம்மாறாது செலுத்து!
ஆன்றோர் காட்டிய திசையில் செலுத்துக!
வாழ்க்கையென்பது தன்னிச்சையன்று!
விதிமுறைகளுக்கு இசைந்ததே வாழ்க்கை!
வாழ்க்கையின் விதிமுறைகளைக் கடைப்பிடி!
வாழ்க்கையைக் கவனமாகச் செலுத்து!
உனது நன்மைக்காகவே கவனம் தேவை! ஒடுவது நீயே
ஒரு நொடிப் பொழுதேனும் உன்வாழ்க்கை கட்டுப்பாட்டை
மீறாதே!
அழிவாய்! அழிக்கப்படுவாய்!