பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

262

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


93. புதுப்பித்தல்!

ஞாயிறு திரிதரு உலகில்
எத்தனை எத்தனை பருவங்கள்!
பருவங்கள் தோறும் புதுமைகள்!
வாழ்க்கை பல்வகையாக அனுபவிப்பது
உணவுக்கு மணமூட்டும் மசாலையைப் போல
வேறுவேறு துய்ப்புகள் வாழ்க்கைக்கு மணமூட்டும்
ஒரே வகையான பணி
வாழ்க்கைத் தேக்கத்தின் விளைவைக் காட்டும்;
ஏன் எண்வகை அனுபவங்களைத் தேடக் கூடாது!
சோறு உணவுதான்! ஐயமில்லை!
ஆயினும்,
நொறுக்குத் தீனி அவ்வப்பொழுது தேவையில்லையா?
வாழ்க்கையை வகைவகையாக
வாழ்தலும் அனுபவித்தலும்
வாழ்க்கையைப் புதுப்பித்தலாம்!
வாழ்க்கைக்குப் புதுப்புது ஆடை அனுபவங்கள்!
வேறு வேறு பொழுது போக்குகள்!
விவாத அரங்கில் புதிய புதிய செய்திகள்
ஊர்பல சென்று காணல்
ஆகியன.
துக்கத்திலிருந்து மீளும் வாயில்கள்
இந்த உலகம் வேறு வேறு காட்சிகள் அமைந்தது
இந்த உலம் பூணும் புதுமைகள் ப்லப்பல!
நீ ஏன் களைப் படைகிறாய்?
இந்த உலகத்தை அனுபவி! மகிழ்க!