பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

263


94. "இசம்"கள்

நண்பனே!
இந்த உலகில் எத்தனை எத்தனை இசம் கள்!
எண்ணற்ற இசம்கள் இருந்தாலும்
உன் வாழ்க்கையை மிகுதியும் பாதிக்கும்
'இசம்கள் இரண்டே என்பதை உணர்க!
ஒன்று நம்பிக்கையைச் சார்ந்த 'ஆப்டி மிசம்!'
பிறிதொன்று அவ நம்பிக்கையைச் சார்ந்த 'ஸ்பெசிமிசம்!'
இவை இரண்டுமே உன்னால் உருவாகுமேயன்றி
இயற்கையுமல்ல; நியதியுமல்ல!
அன்று மில்டன் சொர்க்கமும் நரகமும்
மனிதனின் மூளைப்படைப்பு என்றான்!
அதுபோல,
வெற்றியும் தோல்வியும் உன்படைப்பேயாம்!
உன் மூளையே வெற்றியைப் படைக்கிறது!
தோல்வியும் உன்மூளையின் படைப்பே!
நாம் நினைப்பது போலச் செய்யலாம்!
சில நேரங்களில் செய்ய முடியாமலும் போகலாம்!
வெற்றி பொருந்திய வாழ்க்கை அமைவுடையார்
உடன்பாடும் ஆக்கமும் பொருந்திய
வழியிலேயே சிந்திப்பர் செயல்படுவர்!
வாழ்க்கையில் தோல்விகளைத் தழுவும் தன்மையை
எதிர் மறையாக எண்ணுவர்! ஐயோ, பாவம்!
மானிடசக்தியில் நம்பிக்கைக்கு இணை ஏது? ஈடு ஏது?
முன்னேறும் சிந்தனையுடையான்
வாழ்வின் ஆக்கத்திற்குரிய வாயில்கள் உள்ளன என்பான்!
அவ்வழியில் முயற்சி செய்வான்!