பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

267


97. நீ, நீயேதான்!

ஏ, மனிதனே! நீ! நீ!
நீ, எப்படி இருக்கிறாய்?
உன் மனத்தில் என்ன வைத்திருக்கிறாய்?
அவையே விடை உன்னுடைய சிக்கல்களுக்கு!
உன்னுடைய சிக்கல்களுக்குத் தீர்வு
உனக்கு வெளியே இல்லை! இது உண்மை!
உன்னுடைய சிக்கல்களுக்குத் தீர்வு
உன் உள்ளத்திலிருந்து வரவேண்டும்!
உன் சிக்கல்களுக்குத் தீர்வு காணக்கூடிய தகுதியை
உன் உள்ளத்தில் பெற்று வளர்க!
உன் சிக்கல்களுக்கு ஏற்ற மருந்தை உள்ளத்தே வை!
உன்னுடைய உள்ளமே உன்னை நெடுந்துரரம் எடுத்துச்
செல்லும்!
உன்னுடைய மூளை கோட்டைகட்டவும் செய்யும்
அக்கோட்டையை அழிக்கவும் செய்யும்
ஏ, மனிதனே!
ஹெலன் ஹெல்லர் வரலாற்றைப்படி!
இயற்கை, அந்த மாதரசியைப்
பிறப்பில் பொறிகளை இழக்கச் செய்தது
பிறவிக் குருடு கேளாக் காதுகள்! வாய் பேசா ஊமை!
ஆனால், அவளே அரிதில் முயன்று பட்டதாரியானாள்!
ஹெலன் ஹெல்லரின் சாதனை
உடல் ஊனமுற்றோர் இடையில் ஊக்கத்தைத் தந்தது!
அவள்தம் புகழும் நின்று நிலவுகிறது!
நீ, காற்றில்லா அண்டவெளியில்
தூக்கி எறியப்படவில்லை!
நீ, உறுதியைத் தேடு.! உன்னைச் சுற்றி எண்ணிப்பார்!
நீ, நீயேதான்! என்றும் நீயேதான்!
எப்போதும் நீ, நீயேதான்!