பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

273


103. எதையும் முன்னே பார்!

கவலைகளைக் குழியில் போட்டு மூடு!
அப்படி மூடினால் பல சாவுச் சடங்குகள்
செய்ய வேண்டி வராது!
கவலைகளைக் குழியில் புதைப்பது எப்படி?
உலகத்தைக் கொல்லாமல் கொன்று அழிக்கும்
கவலையை வெற்றி கொள்வது எப்படி?
வாழ்க்கைச் சிக்கல்கள் வந்துறும் பொழுது
எரிச்சல் கொள்ளாதே! தீர்வுகாண முயலுக!
தக்கார் அறிவுரையைத் தேடிப் பெறுக!
எப்போதும் எதிர்வரும் திசையையே பார்!
பின்னோக்கிப் பார்க்காதே!
படைப்பிலே கண்கள் முன்னே பார்ப்பதற்குத்தான்!
பின்னே பார்ப்பதற்கல்ல!
உன்முன்னே பார்க்க ஏராளமானவைகள்!
வழித்தடம் முழுதும் வாய்ப்புகள் பல்கி உள்ளன!
தடைகளை, உன் மூளைகளிலிருந்து அகற்றுக!
அத்தடைகளைச் செயலற்றவை யாக்கு!
பயணம் இனிதே நிறைவுறும்!
உன் இடர்ப்பாடுகளை மதிப்பீடு செய்!
அந்த இடர்ப்பாடுகளைக் கடந்து செல்லும் ஆளைத்தேடுக!
வெற்றிக்குரிய வாயில்களை நாடுக!
உன் வாழ்க்கையின் சிக்கல்களை
வரும் முன்பே வரவேற்புக் கூறாதே! எதிர்கொண்
டழைக்காதே!
உன் வாழ்க்கையில் சிக்கல்கள் மேவி வரும்பொழுது
ஏற்று எதிர்கொண்டு தீர்வுகாண்க!
நாள்தோறும் வரும் சிக்கல்களுக்குத்
தீர்வுகாண நாள் போதவில்லை!
இன்று ஏன் நாளையப் பற்றிய கவலை?
துக்கத்தைப் போட்டு அமுக்கு! காப்பினைத் தேடுக!
கவலையை மற! வாழும் வழி இதுவே!