பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

279


108. தந்தை

புலவர் புகழும் புறநானூறு
சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடன் என்று
அறமுரைத்தது அன்று!
ஆம்! ஒருவன் வாழ்க்கையை உருவாக்குவதில்
தந்தையின் பங்கு பெரிது!
ஒருவனின் வாழ்நில்ைகள் தோறும்
தந்தையின் கொடை பொதுளுதல் இயல்பு!
ஆதலின்,
தந்தையின் சிறப்பு
பணிகளும் பணிகளிடைப் பெறும் பெயர்களும்
பலப்பலவாகும் என்று மேலைநாட்டார் குறிப்பர்.
அழிவில் செல்வம் உடையராயின் - "தந்தை'
கழனி உழுது விளைவிப்பாராயின் - "pa"
என்றழைப்பர் மக்கள்!.
தொழில் நுட்பம் தேர்ந்த தந்தையாயின் "pop"
என்றழைத்துப் பூரிப்பர் மக்கள்!
விளையாட்டுத் துறையில் வல்லவராயின் papa
என்றே அழைத்திடுவர்!
சமுதாயச் சிற்பியானாலும் papa என்று அழைப்பர்;
இவ்வாறு பலபெயரில் அழைப்பர்.
தந்தை ஒருவரே!
தந்தையே ஊனையும் உயிரையும் வளர்த்திடும்
செல்ல 'அப்பா'
மனிதனின் வளர்ச்சியில்
தந்தையின் பங்கு அளப்பில!
தந்தை வாழ்க!