பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

281


110. பெற்றோரின் அருமைப்பாடு!

இயற்கை சுழன்று சுழன்று
நாள்தோறும் ஏற்படும்
இழப்புக்களை ஈடுசெய்து வருகிறது!
இயற்கை எப்போதும் தவறுவதில்லை!
குழந்தைகள் பாதுகாக்கப் பெறுதல் வேண்டும்
ஆம்!
குழந்தைகள் மனிதனாகவோ, மங்கையாகவோ
வளரும் வரையில்
தந்தையே பொறுப்புடன் வளர்க்கின்றான்!
ஆனால் இந்த உலகம்
இளமை உருவாக்கம் பெறும் பாங்கை உணர்வதில்லை!
அதனால்,
தந்தையை வளரும் இளைய உலகம்
தன் வளர்ச்சிக்கு ஊறாக உள்ளவர் என்று
எதிர்ப்புணர்வுடன் காண்பதே மரபு!
மக்கள் தந்தை சாகும் வரையில்
அவர்தம் மதிப்புணர மாட்டார்கள்!
ஆனால்,
அவர்கள் தந்தையாகிற போது
தாம் நடத்தப்படும் விதம் அறிகிறபோது
தமது பெற்றோரின் அருமைப் பாட்டை உணர்வர்.

கு.XIV.19