பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

282

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


111. தேய்ந்த சந்தனக் கட்டை!

தரணியில் சிறந்த தந்தைக்குப் போற்றுதல்!
நமது தந்தையிற் சிறந்த வீரர் யார்?
தந்தையின் கண்ணிரும் செந்நீருமல்லவோ
நம்மை வளர்த்து உருவாக்கியது!
நம்மை வளர்த்து வாழ்வித்த தந்தையின் வீரம்
செருகளத்து வீரத்திற்கு ஒருபோதும் தாழ்ந்த தன்று
இந்த உலகிலிருந்து தப்பி ஓடாமல்
பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காமல்
தந்தையாகி என்னை வளர்த்த விவேகம்
நாள்தோறும் தந்தையின் தீரமும் திறமும்
எண்ணில் அடங்கா! என்னவென்று சொல்வது?
தியாகம் எது? அர்ப்பணிப்பு எது?
ஒருவர்தம் வாழ்க்கையை மற்றவர்க்காக
அர்ப்பணிப்புணர்வுடன் உழைத்தலே தியாகம்!
தந்தை இதைச் செய்தார்
நாள்தோறும் செய்தார்; பலநாளும் செய்தார்
சந்தனக் கட்டை அறைத்து அறைத்துத் தேய்வதைப்போல்
தனயன் வளர்ச்சிக்குத் தந்தை
தம்மைச் சிறுகச் சிறுக அழித்துக் கொண்டார்
வாழ்க்கை என்ன மலர்ப்பாதையா?
பொருளிட்டலும் வாழ்வும் நேர்கோடு போல்
ஒத்திசைந்து நிற்கவில்லையே!
வரவு குறைகிறது; செலவு கூடுகிறது!
இந்த இடர்ப்பாடு! மிக்க சூழ்நிலையில்
குடும்ப பாரம் துரக்கிச் சுமந்த
தந்தையின் வீரம் விளம்பும் தகையதன்று!
தந்தையின் நினைவு
நமது நீங்கா நினைவாக இருக்கட்டும்!