பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

284

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


113. நனிபுகழ் வெற்றி!

இடர்களும் துயர்களும் அடர்ந்த
அயர்வுடைய வாழ்க்கையை
அவலம் நீக்கி அன்புகலந்த இன்பம் தருவது
அன்பொடு கூடிய நம்பிக்கையின் பாற்பட்ட
பழக்கங்கள்! வழக்கங்கள்!
நமது பழக்கங்கள் நமது வலிமை!
நம்பிக்கையுறுதி யுடையோன்
சந்தையில் நல்ல விலைக்குப் போவான்!
அவன் செய்யும் பணியிலும்
அவன் ஓங்கி உயர்ந்து நிற்பான்!
நம்பிக்கை சார்ந்த வாழ்க்கை முறைமன்றங்களை நாடாது!
நம்பிக்கை சார்ந்த பழக்கத்திற்கு மாறான
எந்த ஒரு கருத்தையும் ஏற்காது!
நம்பிக்கையின் விலை கூடுதலாக இருக்கலாம்!
உணர்வு கலந்த நம்பிக்கை
நனிபுகழ் வெற்றியைத் தருகிறது!
பயங்களை விட நம்பிக்கை வலிமையானது!
நம்பிக்கை கட்டுப்படுத்தும் வரிச்சட்டம்!
நம்பிக்கை உரத்தகுரல் கொடுக்கும்!
உழைப்புக்கு உயர்த்திய கரங்கள்!
முன்னேறிச் செல்லும் நடை!
நம்புகிறார்கள்! நிற்கிறார்கள்!