பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

286

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


115. தூய்மையே வாழ்வு!

விநோதமான மனிதர்கள்! விசித்திரமானவர்கள்!
ஊரைச் சுற்றுவர்: அழுக்குகளைக்
கண்டெடுப்பர்! கண்டெடுத்த அழுக்குகளைப் பூசுவர்!
ஆயினும்,
அழுக்கை அழுக்கால் சந்திக்கமாட்டார்கள்!
உன்னால் அழுக்கை அகற்ற இயலுமா?
செய்! அழுக்கை நீக்கு! அழுக்கைத் தூக்கி எறி!
அழுக்கைக் காண்பவர் துரய்மையில் ஆர்வலர்!
தூய்மைகாணும் ஆர்வம் இல்லையேல்
ஏன் ஒருவர்மீது அழுக்கை வாரிப்பூசவேண்டும்?
அழுக்குடையார்மீது மேலும் அழுக்கைச் சேர்ப்பதில்
யாது பயன்
சிறுமை துரற்றுவது குறையே!
வெறுப்பின் காரணமாகவும் ஒருவனின் அழுக்கைக்
காணாதே!
அழுக்கை அள்ளி விசாதே!
நீ வீசும் அழுக்கை அவர் திரும்ப வீசலாம்!
அழுக்கை அகற்றப் பாடுபடுக!
அழுக்குக் கையுடன் சுத்தத்தைத் தீண்டி
அழுக்குப்படுத்துவதனால் யாது பயன்?
பிறர்தம் அழுக்குகளை அகற்றுக!
தூய்மையே பேசுக!
தூய்மையே வாழ்வு.!