பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

292

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


121. நல்லதை நாடு!

நல்லதை நாடு நல்லவனாக இரு
நாட்டின் தலைவனைவிட நல்லவனுக்கே மதிப்பு!
நன்மையும் தீமையும் மக்களால் -
வாழ்வியல் சூழல் நோக்கி வரவேற்கப் பெறும்!
நல்லதற்காக நல்லது மக்களை எளிதில் ஈர்ப்பது!
ஆயினும்,
எந்த ஒரு பணிக்கும் தகுதி
அவன் நல்லவனாக இருப்பதும் நல்லது செய்வதுமேயாம்!
பாரில் உயர்ந்த மனிதர்கள்
எண்ணாமலே, சிந்திக்காமலே பேசுவர்!
பெரியவர்கள் உண்மையாகவே பெரியவர்கள்:
அவர்களின் சிந்தையும் சொல்லும்
ஒரு படித் தாயின.!
நல்லல்தயே எண்ணுவர்
முடிவிலா நன்மையே குறிக்கோள் எனக் கொள்வர்.
எது நல்லதோ அந்த நல்லதையே செய்வர்
நன்றும் தீயதாதல் உண்டு;
தீயதும் நன்றாதல் உண்டு!
ஆயினும்,
இருளை அகற்ற ஒளிவிளக்கு ஏற்று!
கசப்பானவைகளுக்கு ஈடாக இன்பத்தைத் தருக!
நன்மையே நாளும் வளர்ந்தோங்குக!