பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

303



129. ஒழுக்கம்!

நீ யார்? உன் பலம் எது?
தனிமனிதனின் வலிமை ஒழுக்கத்தைச் சர்ர்ந்தது!
அடித்தளத்திற் கேற்பவே எழுப்பிய கட்டடம் நிற்கும்;
எவருடைய வாழ்க்கையும் அளவைக்கு வருதல்
நீதி சார்ந்த வாழ்க்கைமுறையே யாகும்!
பலவீனம் பலத்தைக் காக்க முடியுமா?
ஒழுக்கமிலாதார் எவருக்கும் உதவ இயலாது!
நெருக்கடியில் தோன்றும் சில பழக்கங்கள்
ஒழுக்கமாகா:
நெருக்கடி காலத்தில் நீ வெளிப்படுத்துவதே ஒழுக்கம்!
என்றும் நல்லவனாக இருப்பதே ஒழுக்கம்!
ஒழுக்கம் என்பது ஒருநாள் சரக்கல்ல!
பலநாள் எண்ணங்கள்; செயல்களின் திரட்சியே
ஒழுக்கமென உணர்க!
ஒழுக்கம் என்பது ஒன்றல்ல!
ஒழுக்கம் என்பது நீ எப்படி ஆனாய் என்பதுதான்!
நீதான் ஒழுக்கத்தின் ஒரு பெயரால்
விளங்கித் தோன்ற முயலுக!
நீ எப்படி இருக்கிறாய் என்பதே கேள்வி!