பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

308

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



134. பழைமை

பழைமையை ஏசுவதில் விவேகமா இருக்கிறது?
பழைமையைக் கழிப்பதில் அவசரம் ஏன்?
பழைமையைக் கழிப்பதில் நிதானம் காட்டுக!
பழைய உண்மைகள் உண்மைகள் அல்லவா?
பழைய கோட்பாடுகளில் அறிவின் ஆக்கம் இல்லையா?
பழைய கொள்கைகளில் அடிப்படை இல்லையா?
பழைய கோஷங்கள் எழுச்சிதரவில்லையா?
காலத்தால் பழைமை வாய்ந்ததனால் கெட்டதா, என்ன?
இன்று பிறந்த புதுமை எல்லாமும் நல்லவைதானா?
எந்த ஒரு பழைமையிலும் பொருள் இருக்கும்!
அப்பொருளைத் தேட முயலுக!
நீக்கும் முயற்சி வேண்டாம்!
பழைய வேலைகளைப் பார்!
அவை மேலும் மேலும் உயர்ந்து வளர்ந்துள்ளன!
நீ பழைய நிலை எல்லையை அழிக்க இயலுமா?
வளரும் இயற்கையின் எழிலைப்பார்!
எந்த ஒரு பழைமையும் பயனில்லையேல் நிற்காது.
கால வெள்ளத்தைக் கடந்து நிற்கும் பழைமை
பயனுள்ளதே என்று தேர்க!
கால எல்லை இல்லாத உண்மையை எண்ணுக!
இப்பழைமைகள் புதுமைக்கும் புதுமையானவை!
காலம் மட்டுமே அளவுகோல் அல்ல!