பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

324

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


150. புத்தக நண்பன்!


மனிதன் யார்? இந்த மனிதன் எப்படி?
அவன் யார்? அவன் குணங்கள் எப்படி?
அறிந்து பழகுவது எப்படி?
அந்த மனிதனுடைய நண்பன் யார்? கூறு!
அவன் விரும்பிப் படிக்கும் நூல் எது?
இவ்விரண்டும் காட்டும் அவனை!
எங்கே கவர்ச்சி இருக்கிறதோ
அங்கே விரும்புதலும் நிகழும்
சில இலக்கியங்கள் எடுத்துக் கூறும்
நண்பனைப் போல் அவன் இருப்பான்!
மனிதன் தன்னைத் திருப்திப் படுத்த வேண்டும் என்றே
விரும்புகிறான்!
ஒரு புத்தகம், படித்த திருப்தியைத் தராது போனால்
அப்புத்தகத்தை ஒருவன் படிக்கமாட்டான்:
மனிதன் அனுபவிக்கின்றானா? அல்லது இல்லையா?
அவன் மனித குலத்தின் ஒருபகுதி !
ஒத்த இருமனம் ஒன்றுசேர முடியும்!
ஒத்துப் போகாதவர்கள் தடுமாறுவர்!
எதிர் எதிர்த் திசையில் செல்வர்!
உன் நண்பன் யார்? நீ அவனாவாய்!
நீ விரும்பும் உன் புத்தகங்களைக் காட்டு!
அவை, உன்னைக் காட்டும்!
நண்பர்களைவிட, நன்றாகவே காட்டும்
அவர்கள் எங்களிடமிருந்துதான் வந்தவர்கள்
ஆனால், அவர்கள் நாங்கள் அல்ல!
அவர்கள் நாங்களாக இருந்திருந்தால்
அவர்கள் எங்களுடனேயே இருந்திருப்பார்கள்!
இல்லையே! இதுதான் உலகம்!