பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

326

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



152. காரணம் அறிந்து கடமையைச்

செய்!

நிகழ்வுகள் அனைத்துக்கும் காரணங்கள் உண்டு!
காரணங்கள் அறிந்து தொழிற்படின்
முன்னேற்றம் உண்டு!
காரணங்கள் அடிப்படையிலேயே
தொழில்கள் நடக்க வேண்டும்!
முயற்சியினால் வரும் வெற்றிகளைவிடக்
காரணங்களால் வரும் வெற்றி உறுதியானது!
காரணங்களுக்கு வடிவம் கொடுப்பது
மனிதனின் முன்னேற்றத்திற்கு அடிப்படை!
காரணங்களை உணர்ந்தவன் கடமைகளைச் செய்வான்;
தன்னையே மாற்றிக் கொள்வான்;
உலகத்தையும் மாற்றுவான்;
வாழ்க்கைதான் என்ன?
காரணங்களும் முயற்சிகளும் கூடியதுதான் வாழ்க்கை!
மனிதன் திட்டமிட்டுப் பயிர் செய்கிறான்!
மகசூலை அறுவடை செய்கிறான்!
மனிதன் கிணறு தோண்டுகிறான்!
கிணற்றில் தண்ணீர் எடுக்கிறான்
அணைகட்டுகிறான்; ஏரி உருவாக்குகிறான்
இவையெல்லாம் மனிதனின் செயல்!