பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

332

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



தொழில் செய்! நம்பு! இதமாகப் பழகு!
இவைகளைச் சார்ந்து நீ வாழ்க!
உன் வாழ்க்கைக்குப் புதிய காலண்டர் போடுக!
உன் வாழ்க்கை கடிகாரத்தால் அளக்கப் பெறவேண்டாம்.
இதயத் துடிப்புகளால் அளக்கப் பெறட்டும்
வாழ்க்கை சாவை, நோக்கியதே!
நாமும் சாகத்தான் வேண்டும்; தப்ப வழியில்லை!
ஆதலால், இன்றே வாழத் தலைப்படுக
வாழ்க, வாழ்வாங்கு வாழ்க!