பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

333



157. ஏமாறுதலும் ஏமாற்றுதலும்

ஆய்வு செய்க! கண்டு பிடிக்கவும்!
காரண காரியங்களைக் காணவும்!
உன்னைச் சுற்றி உன் உதடுகளை நோக்கி
சூதுக்காரர்கள், ஏமாற்றுகிறவர்கள்
சூழ்ந்து நிற்கலாம்; திறமையாக நடிக்கலாம்!
ஆரவாரமான பொய்யான அன்புகாட்டி
உனக்குக் கேடே சூழலாம்!
தீயவர்கள் தத்துவப் பேராசிரியர்களாகவும் இருக்கலாம்!
ஆயினும் அவர்கள்
தத்துவங்களுக்குச் சொந்தக் காரர்கள் அல்ல!
அவர்கள் உனது நலன்களைக் காணார்!
உனது பலவீனங்களையே கணித்துப் பழிவாங்குவர்!
தந்திரங்களே அவர்கள் வாழ்வு!
உன்னுடைய நாணயத்துடன்
நாணயமற்றவர் விளையாடுவர்!
பொய்யற்ற வாய்மையைக் கனவிலும் சொல்லியறியர்
உன்னுடைய சத்தியத்தைச் சோதனை செய்வர்.
அவர்கள் அவர்களையே நேசித்துக் கொள்வர்.
ஆனால், கூறுவதோ உன்னை நேசிப்பதாக!
தாமே நம்பாத வேதங்களை ஒதுவர்!
இதுதான் உலகம்! நாடகமே உலகம்!
எவரையும் தேர்ந்து தெளிக!
நாள்தோறும் நாடி ஆய்ந்து நட்புக் கொள்க!
ஏமாளிகள் இருக்கும் வரையில்
ஏமாற்றுபவர்கள் இருப்பர்!