பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

334

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



158. பரபரக்காதே!

வாழ்வினைக் கடந்துவரும் நாழிகை தோறும்
சிக்கல்கள் வந்த வண்ணம் உள்ளன!
நாம் எப்படி
இந்தச் சிறிய சிறிய தொல்லைகளைச் சந்திப்பது?
ஏமாற்றங்களை ஏற்பது?
அன்றாட வாழ்வில் ஏற்படும் பதற்றங்களை
எங்ங்னம் சந்திப்பது? தீர்வு காண்பது?
முதலில் எதார்த்தவாதியாக இருந்து
அவைகளைத் தெரிந்து கொள்!
அவைகள் வரட்டும்!
அந்தத் துன்பங்களை, ஏமாற்றங்களை
உளமார ஏற்றுக்கொள்!
அமைதிக்கு அதுவே வாயில்!
ஏன்? தீவிரம்கூட ஏற்பதில்தான் இருக்கிறது!
இரண்டாவதாக அந்தத் துன்பங்களை ஏமாற்றங்களை
அவற்றுக்கு வளைந்து கொடுப்பதன் மூலம்
முறியடிக்கலாம்!
அமைதியும் இனிமையும் கலந்த உள்ளத்தால்
அவைகளின் ஆற்றலை முடக்கு!
அவைகளின் மூலம் படித்துக் கொள்
தாழ்ந்து உடன்போய் முறியடித்து விடு!
இந்த முறையே நீதிசார்ந்தமுறை!
எதிர்ப்பதிலும் அழிப்பதிலும் விடச் சிறந்தவழி
தகுதி, தீர்வின்பாற்பட்டது!
தகுதி, எதிர்த் தாக்குதலில் அல்ல!
தலையில் முடியாக முட்புதரே வந்தாலும் பரபரக்காதே!
ஆராய்ந்து அடங்கு!
ஒருவருக்கும் தீங்கு நினையாதே!
வாழ்வியல் நெறி இதுவே!