பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 நாள்வழிக் கவிதைகள்

335



159. நினைப்பும் மறப்பும்

நமக்கு வரும் அவதூறுகளைக் கடந்து செல்க!
சூடாகவோ, சூடு குறைவாகவோ
உன்னைப் பற்றிய மதிப்பீடுகள் வரும்!
நாம் மற்றவர்களால் துன்புறுத்தப் படுகிறோம்!
மற்றவர்களும் துன்பங்களை மறக்க மறுப்பின்
எப்போதும் கலகச் சூழலிலேயே இருக்க நேரிடும்!
நமது நண்பர்கள் நம்மை இழப்பர்!
இரத்தக் கொதிப்பு கூடும்!
நமது திறமை கீழ்நோக்கிப் போகும்
இவையெல்லாவற்றையும் தவிர்க்க
நமக்கு எதையும் தாங்கிக் கொள்ளும்
பொறுத்தாற்றும் பண்பு தேவை!
இந்தப் பொறுத்தாற்றும் பண்புக்கு வேறுபாடு ஏன்?
எல்லார் மாட்டும் பொறுத்தாற்றும் பண்பு
விரிவடைவதாக!
நாம் எந்த ஒரு நீதியாலும்
துன்புறுத்தப்படமாட்டோம்
அன்பும் நீதியும் துன்புறுத்தும் இயல்பின அல்ல!
நீதியில் சிறந்தோர் துன்புறுத்தார்
அநீதிவான்களுக்கோ நம்மைத் துன்புறுத்தும் உரிமை
இல்லை!
நெறியில் நீங்கியோர் என்று நினைந்து மறந்திடுக!
அவர் மாட்டும் அன்பு காட்டுக!