பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

337



161. புத்தகக் கருவூலம்!

புத்தகங்கள் ஒப்பற்ற கருவூலங்கள்!
சென்ற தலைமுறையோடு உறவு உண்டாக்குவன;
பழைய புத்தகங்கள்!
இன்றைய தலைமுறையோடு உறவு உண்டாக்குவன
புதிய புத்தகங்கள்!
புத்தகங்கள் பழையவை - புதியவை
எப்படியிருந்தால் என்ன?
எல்லாப் புத்தகங்களும் மனிதனை மாற்றுகின்றன!
வளர்க்கின்றன!
அறிவு கோலோச்சும் எல்லையில் தலைவனாக்குகின்றன!
அறிவு கோலோச்சும் இடத்தில் வறுமை வெற்றி
கொள்ளப் பெறும்!
கஞ்சி இல்லாமையின் காரணம் அறிந்தால் வறுமை
நீங்கும்!
கஞ்சி என்ன? சோறு கிடைக்கும்!
துக்கங்களுக்கு ஆறுதல் அளிக்கப்பெறும்
துயரங்கள் மாற்றப்படும்
நாளும் நல்ல புத்தகங்கள் படிப்போர்
நாளும் வளர்வர்; உயர்த்தப் படுவர்!
நல்ல புத்தகங்கள் படிப்பு நம்பிக்கை தரும்;
சிந்தனையைத் தூண்டும் புத்தகங்களைப் படி!
எப்போதும் புத்தகங்களுடன் இரு!
இரவில் படுக்கும்முன் புத்தகங்களைப்படி!
தூங்குமுன் அறிவில் வளர்வாய்! உணர்வில் வளர்வாய்!
எத்தனையோ மனிதர்கள் நல்ல நூல்களைப் படித்ததன்
பயனாகப்
புதுவாழ்வைத் தொடங்கினார்கள்!