பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

338

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



162. சின்னமும் சின்னமே!

எப்போதும் சிறியது நல்லது!
சின்னச் சின்னவைகளைப் போற்றுவாயாக!
சின்னவை புனிதமானவை; நல்லவை
சின்னச் சின்ன வார்த்தைகள் செவிக்கினியன
கடவுள், திருக்கோயில், வேதம்,
நம்பிக்கை, நல்லெண்ணம், தாய், அன்பு, வீடு,
குழந்தைகள் - இந்தச் சொற்கள் சின்னவைதான்!
ஆனாலும் சிந்தைக்கினியன! செவிக்கினியன!
இந்தச் சின்ன வார்த்தைகளைச் சுற்றித்தானே
நமது வாழ்க்கை வட்டமிடுகிறது
சிறிய சொற்கள்! சின்னஞ்சிறு செயல்கள்!
ஆயினும்; அவை வாழ்க்கையின்
பரிணாம வளர்ச்சிக்குத் தேவையானவை!
தாகத்தால் தவிப்பனுக்கு ஒருகுவளை தண்ணீர்
இந்த அறத்திற்கு ஈடு விண்ணிலும் இல்லை; மண்ணிலும்
இல்லை!
சின்னச் சின்னப் பாடல்களே
இதயத்தில் இன்பத்தை நிறைக்கும்!
சின்ன இதயமே பெரிய உலகத்தை ஈர்த்து அணைக்கிறது!
அற்ப மகிழ்ச்சிகள் நெடிய இன்பத்தை இகழ்கிறது!
பெரிய மனிதர்கள் பல அரிய சிறிய பணிகளும்
செய்கின்றனர்!
சின்னச் சின்னச் செயல்கள்
உலகை ஒளியுடன் வைத்துக் கொள்கின்றன!
சின்னச் சின்னவைகள் நாளுக்குநாள் பெரியவையாகும்!
மனிதனுக்குத் தேவை சிறியது;
அது நெடிய பயன் தருகிறது!