பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

341



165. வாழ்க்கைக் கப்பல்!

நீ, ஒரு புது உலகத்தைக் காணலாம்:
உன்னால் முடியும்! நீ செய்தால் முடியும்!
நீ, இப்போது இருப்பதை விடச்
சிறந்த புது உலகத்தைப் படைக்க முடிவு செய்!
இருக்கும் உலகத்தை நம்பு!
இருக்கும் இந்த உலகம் விநோதமானதும் அல்ல!
துன்பமானதும் அல்ல!
இந்த உலகம் உண்மையானது!
இதை நீ விரும்பியவாறு ஆக்க முடியும்
நீ நம்பு! முடியும் என்று நம்பு!
வழியைக் காண்பாய்!
நீ முயன்றால் முடியும்!
உனது வாழ்க்கைப் படகை நகர்த்து!
இயக்கிச் செலுத்துக!
காற்றடிக்கும் திசையில் செலுத்தாதே!
மறித்து, நீ செல்லவேண்டிய திசையில்
உன் வாழ்க்கைக் கப்பலைச் செலுத்து!
இடையீடு இல்லாத முயற்சியுடன் செலுத்து!
இந்த உலகத்தில் யாண்டும் இன்பமில்லை!
நம்பிக்கையும் நல்லெண்ணமும் படைப்புக் குணங்கள்
இயல்பல்ல!
கொலம்பஸின் உணர்வினைப் பெறு!
கொலம்பஸைப் போல் மேலும் மேலும்
உன் வாழ்க்கைக் கப்பலை விடாமுயற்சியுடன் செலுத்து!
நம்பிக்கையை இழந்தபின் ஏதும் செய்ய இயலாது!
செலுத்து, நம்பிக்கையோடு வாழ்க்கைக் கப்பலை!
முயற்சியுடன் செலுத்து! புது உலகம் காண்பாய்!