பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

347



171. செல்வர்கள்

நீ, செல்வருள் செல்வனாக வேண்டுமா?
அமெரிக்க வளநாட்டில்
பட்ரிங் ஹென்றி
உடைமை உரிமை ஒலை ஒன்று எழுதினான்!
அதில்,
“நான் சம்பாதித்த எல்லாவற்றையும்
அன்பான குடும்பத்திற்குத் தருகிறேன்!”
அவர்களை மேலும் செல்வராக்க
கிறிஸ்த மதம் சிலதரும்.
மனிதனின் ஒப்பற்ற செல்வம்
பணப்பையில் இல்லை!
அவனுடைய இதயத்தில் இருக்கிறது
இதயம் விசுவாசத்தால் நிறையட்டும்;
இதயம் நம்பிக்கையால் நிறையட்டும்;
இதயம் சுயமரியாதையால் நிறையட்டும்.
இதயம் நல்லெண்ணங்களால் நிறையட்டும்.
எவரெவர் இதயங்கள் இவைகளால் நிரப்பப் படுகின்றனவோ
அவர்கள் எல்லாரும் செல்வர்கள்!
அவர்கள் செல்வர்களுள் செல்வர்கள்!
இதயம் நிரம்பிய இவர்கள்
பலவற்றை அடைவர்; தேவைகள் வழங்கப்பெறும்;
ஆதலால், நீ உடல் தேவைகளுக்குக் கொடுக்கும் பொழுதே
அவர்களின் இதயத்திலும் சிலவற்றை
வைக்கத் தவறி விடாதே!
இதயத்தில் வைக்கப் பெற்றவை
பயன்கள் பலதரும்;
பணம் இல்லாத பணப்பை எதற்கு?
இனிய பண்புகள் ஏதுமில்லாத
இதயம் இருந்து என்ன பயன்?