பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

353


177. அணுகு முறை

கற்றுக்கொள்! காதைகளிலிருந்து கற்றுக் கொள்!
எள்ளி நகையாடப்படும் மூடனின்
வாழ்க்கையிலிருந்து படிப்பினை பெறுக!
ஒரு மனிதன் சாலை ஓரத்தில்
ஒரு வித்தியாசமான ஒரு மிருகத்தைச் சந்திக்கிறான்!
அவன், மிருகத்தைத் தாண்டிச் செல்லமுடியாமல்
அந்த மிருகத்தை இணைத்துக் கொண்டு
பயணத்தைத் தொடர்ந்தான்!
சற்று தூரம் போகவும் அந்த மிருகம்
அவனை மிஞ்சிப் பயணத்தை மேற்கொண்டது!
மிஞ்சி முன் சென்றதுடன்
மும்முறை உறுமவும் செய்தது!
எவரும் அந்த மிருகத்தை மிஞ்ச இயலவில்லை!
மேலும் மேலும் மிருகத்துடன் மனிதனின் பிணைப்பு
நெருக்கமாகியது.
மேலும் மேலும் நிலைமை மோசமாயிற்று!
தலைமை தாங்கியது சண்டையேயாம்!
வெறி பிடித்த இந்தச் சண்டை வளரும்:
நாம் பக்குவப் பட்டவர்கள்
என்று கூறிக் கொள்ளலாம்
ஆனால்,
எல்லாம் நமது அணுகுமுறையைப் பொறுத்ததேயாம்!