பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

354

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


178. இனிப்பும் கசப்பும்

இந்த உலகம்!
இனிப்பும் கசப்பும் கலந்த கலவையேயாம்!
இனிப்பை மட்டும் விழுங்குக!
இனிப்பையும் கசப்பையும் கலந்து விழுங்குக!
கசப்பையும் பட்டினியையும் ஏற்றிடுக!
இந்த உலகம் முழுமையான இன்பத்தினை உடையதல்ல!
இந்த உலகம் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன?
நன்மையைப் போலவே தீமையையும் ஏற்றிடுக!
இது உண்மையான நட்பின் அளவுகோல்!
நம்மில் தவறு செய்யாதவர்கள் யார்? யார்?
உண்மையான தோழனாக விளங்குக!
சுய நலத்தையே நாடி நட்புச் செய்வது வாணிகம்!
நண்பனின் தீமையையும் ஏற்றுக்கொள்வது
நட்பின் பாங்கு!
இந்த உலகில் எந்த இருவரும்!
முற்றாக ஒத்த கருத்துடையவர்கள் இல்லை!
உன் பணிக்கு உண்மையாக இரு!
எதுவும் சொர்க்கமல்ல!
உண்மையின் பள்ளி எது?
எங்கே இருக்கிறது?
வாழ்க்கையின் பாடமே உண்மை!