பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

356

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


180. பணம்

பணம் உள்ளம் கவர்வதன்று!
ஆனாலும், பணத்திற்கு வரவேற்பு இருக்கிறது!
பணத்தின் மீது ஆசை
பணக்காரனையும் நேசிக்கத் துரண்டும்!
பணம் உயர்ந்தது
உடல்நலம் உயர்வற உயர்ந்தது!
பணக்கார நோய்களுக்கு ஏகபோக உபசாரம்!
அழைப்புக்களும் பல உண்டு!
எதற்காக?
மனிதனுக்காக அல்ல! அவனுடைய பணத்திற்காக?
பணம், எளிதில் கதவுகளைத் திறக்கும்
கும்பிடுகளும் பெற்றுத் தரும்!
பணப்பை காலி; மக்களும் போயினர்!
உனது காசுகள் பத்திரம்!
விழுங்கும் மனிதனிட மிருந்து காத்திடுக!
பணம் நண்பர்களைக் கூட்டவும் செய்யும்!
பணம் நண்பர்களைப் பிரிக்கவும் செய்யும்!
பணம் கவனத்திற்குரியது! கவனம்! கவனம்!