பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

357


181. காலம் - காலன்!

என் செல்லமுள்ள ஆன்மாவே!
சற்றே கேள் செவி சாய்த்து!
இன்று எனக்குரிய உரிமைநாள்!
நாளை என்னாகும்? யாரறிவார்?
நாளை நாள் களவு போகாதென்பதற்கு உறுதி என்ன?
காலம் என்னை எடுக்கும் முன்னே
நான் காலத்தை எடுத்து வாழ விரும்புகிறேன்!
இன்றைய நாளையும் நாளைய நாளையும்
இணைக்கும் வெள்ளிஇழை நுண்மையானது; மெல்லியது!
யாரறிவார்?
வாழ்நாளில் பயனற்றுக் கழிந்துபோன
பகுதியே அதிகம்!
ஆனாலும் ஒர் உண்மை புலனாகிறது!
நாள்தோறும் சிலபொழுது வீணாகிறது
லாங்பெல்லோ என்ற சிந்தனையாளன்
கூறுவது போல்
இளைஞனும் சாவான்!
முதியவன் சாவது உறுதி.