பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

359


183. விழிப்புணர்வு

விழிப்புணர்வு தேவை! பேரங்கள் பேசாதீர்கள்!
நியாயமில்லாத பேரங்களில் ஜாக்கிரதை உணர்வு தேவை!
தோற்றம் நன்று; உள்ளே புழுக்கள்!
பழங்கள் குறைந்த விலையில் கிடைக்கலாம்
எதையும் தராமல் சிலபல பெறலாம்
என்ற நம்பிக்கை நன்றன்று!
கல்வி, அரசியல், மதம் - இலவசம்! இலவசம்!
காற்றும் இலவசம்!
ஆனால் தூய்மைக் கேடுற்ற காற்று!
எதற்கு விலை கொடுத்தாயோ அதைப் பெறுவாய்!
விலையோ அல்லது குறைந்த விலையோ கொடுத்தால்
பெறுவது எதுவாக இருக்க முடியும்!