பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

372

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


195. உறுதி மொழி!

பிழைகளைத் தவிர்ப்பேன்!
உரிய சாதனைகளுக்கு அழுத்தமான முயற்சிகளை
எடுப்பேன்!
முதன்மையானவற்றை முன்னுரிமை வரிசையில் செய்வேன்.
பணிகளை மகிழ்வுடன் செய்வேன்!
எந்த ஒன்றும் மன அமைதியைக் கெடுக்க அனுமதியேன்!
நான் என் கட்டுப்பாட்டை இழக்கமாட்டேன்!
எந்தச் சூழ்நிலையிலும் இழக்கமாட்டேன்
என்னை வளர்த்துக் கொள்வேன்!
என்னையே நோக்கி உருவாக்கிக் கொள்வதில்
காலம் மிகுதியும் செலவழிப்பேன்
ஆதலால்,
மற்றவர்களை விமர்சனம் செய்யப் பொழுது இல்லை!
நல்லதைச் சிந்திப்பேன்! நல்லதுக்காகச் செய்வேன்!
நன்மையை எதிர்பார்ப்பேன்!
மனிதர்களுக்கு நண்பனாக இருப்பேன்!
நல்லதுக்கும் நியாயத்துக்கும் துணை நிற்பேன்!
வழக்காடுவேன்!
உண்மையாக இருப்பேன்! அன்பாக இருப்பேன்!
ஏமாற்றங்களை உணர்வுக் கிளர்ச்சிகளாக ஏற்பேன்
ஒளியின் நிழலில் வாழ்வேன்!
புயல்கள் சூழவரினும் கதிரொளியின் சாயலிலேயே
நிற்பேன்!
சிரித்து மகிழ்வேன்! புன்முறுவல் பூத்த முகம் பேணுவேன்!
எப்போதும் முன்னேற்றத்தையே விரும்புவேன்!
இயக்க நிலையை எப்போதும் பேணுவேன்
நான் இருக்க விரும்பும் நிலைக்குரிய முயற்சி செய்வேன்;
உழைப்பே
எடுத்த முடிவுகளுக்குச் செயலுருவம் கொடுப்பேன்!
தவறாது முடிவுகளுக்கு முயற்சியின் முழு வடிவம்
தருவேன்!