பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

374

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


197. கடிகார மூச்சு

பழைய கடிகாரம் ஒடுவதை நிறுத்திக் கொண்டது!
ஏன்? எதனால்?
கடிகாரம் ஆண்டு முழுதும் “டிக்” ஒலி செய்து
முடிக்க வேண்டிய “டிக்” 31,536,000 தடவைகள்
இங்ஙணம் அடிக்கவேண்டிய எண்ணிக்கை
கூடுதலாகவும் குறைவாகவும் வந்தது!
‘டிக்’கில் வித்தியாசம்! மணியில் வித்தியாசம்!
காலத்தில் வித்தியாசம் ஆயிற்று!
உடன் கடிகாரம் மனச் சான்றுடன் நின்று கொண்டது!
கடிகாரத்திற்கு விளக்கம் தரப்பெற்றது!
ஒரு “டிக்” அதைத் தொடர்ந்து
ஒன்றுக்குப்பின் ஒன்றாக “டிக்”
ஒரே நேரத்தில் என்று கடிகாரமும் இசைந்தது!
“டிக்” அடித்துக் கொண்டே ஒடத் தொடங்கியது
அப்படியானால், மனிதன் உடம்பில் புண்ணைக் கண்ட
பய உணர்வினைப் போல
தன் கடமையைப் படிப்படியாக, இயக்கமாகக்
காலந்தோறும் தவறாமல் செய்த
காலங்காட்டுங் கருவி - கடிகாரம்
முப்பத்து ஒராயிரத்து ஐந்நூற்று முப்பத்து ஆறாயிரம்
சுற்றியது என்று கணக்குக் காட்டுகிறது!
நீயும் உன்வாழ்க்கையில் கணக்குக் காட்ட இயலுமா?
இயன்றால் வாழ்ந்தாய்!
இல்லையெனில் கடிகாரம் நின்றதுபோல்
மூச்சு நின்று கொள்ளட்டுமே!