பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

375


198. அகநிலைச் சிக்கல்

மானுடமே! உனக்கு இலக்கு எது?
“நான் நல்லவனாதல்”
“நான் திறமையில் மேம்பாடுறுதல்”
“நான் மகிழ்ச்சியுடையவனாதல்”
ஆகிய இம்மூன்றும் உன்றன் இலக்குகளாக அமையட்டும்!
இவையே, மானுடத்தின் ஆதாரநிலைகள்
மற்றவையெல்லாம் புறத்த; புகழுமில!
நீ, செல்வம், கல்வி, தகுதி இவை யெல்லாம்
அடைந்து அனுபவித்து வருகிறாயா?
உன்னை நீயே நோக்கு; வினாக்களைத் தொடு!
விடை என்ன?
நான் நல்லவனா?
நான் திறமைசாலியா?
நான் மகிழ்ச்சியுடன் இருக்கிறேனா?
என்ன விடை?
இவையெல்லாம் உன்னிடத்தில் இல்லையா?
மீண்டும் உன்னையே நோக்கு!
உன் இதயத்தைப்பார்! இதயம் விடை தருகிறது!
உணர்ச்சி வசப்படாதே! உன்னைக் கட்டுப்படுத்து!
பரபரப்பை விடு! விவாதம் பண்ணாதே!
அதிகமாக விரும்பு; சற்றே ஐயப்படு!
உன் முன் மனதுக்குத் தடை! உன் அகநிலைச் சிக்கல்
களையும்?
மனிதனை நிர்ணயிப்பது அவற்றின் செயல்களே!
மனிதனின் பெருமையும் மகிழ்ச்சியும்
அவனுடைய படைப்புக்களேயாம்!